தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21ம் தேதி அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உள்ளூர் விடுமுறை:
ஓணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். கேரளாவில் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. ஓணம் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கேரளா மக்களின் சிறப்பு உணவுகள் தயாரிக்கப்பட்டு சிறப்பிக்கப்படும். வழக்கமாக குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த பகுதியில் மட்டுமே உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதேபோல், ஓணம் பண்டிகையை தமிழகத்தில் கேரளாவில் எல்லைக்கு அருகில் உள்ள மக்களும் சிறப்பாக கொண்டாடுவார்கள். கேரளா மாநிலத்தை சேர்ந்த மக்கள் இந்த பகுதிகளில் வசித்து வருவதும் ஒரு காரணமாகும். ஆண்டு தோறும் மிகவும் பிரசித்தியாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து கேரளா மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் நாகர்கோயில் பகுதிகளில் ஓணம் பண்டிகை மிகவும் பிரபலம். இதனால் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21ம் தேதி சனிக்கிழமை அரசு ஊழியர்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். இதற்கு பதிலாக வரும் செப்டம்பர் 11ம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திலும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.