நீட் தேர்வை தமிழில் எழுத 19,867 பேர் விருப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 21, 2021

Comments:0

நீட் தேர்வை தமிழில் எழுத 19,867 பேர் விருப்பம்

தமிழகத்தில் இருந்து மட்டும் நீட் தேர்வை எழுத 1 லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டைவிட சுமார் 10 ஆயிரம் பேர் குறைவு. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கு கடந்த மாதம் 13-ந்தேதி ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. கடந்த 10-ந் தேதியுடன் முடிவடைந்தது. நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டைவிட சுமார் 10 ஆயிரம் பேர் குறைவு.

அவர்களில் தமிழில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருப்பவர்கள் மட்டும் 19 ஆயிரத்து 867 பேர் ஆகும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews