தமிழகத்தில் 12 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 26, 2021

2 Comments

தமிழகத்தில் 12 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூர பகுதியில் 12 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியுள்ளார். மேலும் 22 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


புதிய தொடக்க பள்ளிகள்:

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கல்வித்துறைகளின் கொள்கை குறிப்புக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தமிழகத்தில் உயர் படிப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவாக இருப்பதால் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடன் அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிடும் சூழல் நிலவியுள்ளது. அதன் காரணமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முதல்வர் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து 2021-22 கல்வி ஆண்டில் 2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி மற்றும் இதர மின் வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் என நவீன முறையில் மேம்படுத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். மேலும் 2021 – 22ம் கல்வியாண்டில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூர பகுதியில் 12 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் 22 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. புதிதாக திறக்கப்படும் துவக்கப் பள்ளிகளில் பணநிரவல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் அரசுக்கு நிதி இழப்பீடு இருக்காது.

    ReplyDelete
  2. தரம் உயர்த்தப்படும் பள்ளியில் போதுமான வருகை பார்த்து ஒரே ஆசிரியர் ( அறிவியல் கணிதம் தகுதி உடைய யவர்) (வரலாறு ஆங்கிலம் தகுதி உடைய வர்) போன்றவர்களை பணி அமர்த்த லாம்.அரசுக்கு நிதி குறைவான நிலையில் செலவாகும்

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews