தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்பின் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
பாடத்திட்டம் மாற்றம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆன்லைன் மூலம் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. கலை, அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. கொரோனா இரண்டாம் அலை மீண்டும் வேகமெடுக்கும் இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூடுவதை தவிர்க்க உயர்கல்வித்துறை இந்த நடைமுறையை அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் கள பயிற்சி வாய்ப்பு இல்லாததால் ஆன்லைன் மூலம் தொழிற்பயிற்சி பெற அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கள பயிற்சிக்கான சான்றிதழ் மற்றும் அதற்கான மதிப்பெண் சான்றிதழை பல்கலைக்கழகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் வேல்ராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்பின் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். மேலும் மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் வகையில் ஆராய்ச்சிக்கு தேவையான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். அதுமட்டுமின்றி செயல்முறை பாடத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆலைகளில் பயிற்சி அளிப்பதை பாடத்திட்டமாக வைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.