பீகார் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 11% DA உயர்வை, 75-வது சுதந்திர தினத்தையொட்டி அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு:
பீஹார் மாநிலத்தில் 75 வது சுதந்திர தினத்தையொட்டி காந்தி மைதானத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய பிறகு உரையாற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டிஏவை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார். மேலும் அவர் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 11 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை அதிகரிப்பதற்கான அறிவிப்பை நிதித்துறை விரைவில் வெளியிடும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் பீகார் பொது சேவை ஆணையம் மற்றும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆகிய தேர்வுகளுக்கு மாநிலத்தின் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும் (OBC) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புகளுக்கும் (EBC) மாநில அரசின் ஊக்கத் திட்டம் இப்போது சமூகத்தின் அனைத்து பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ், பிபிஎஸ்சியின் ஆரம்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் ஒரு தேர்வருக்கு அரசாங்கம் 50,000 ரூபாயும், யுபிஎஸ்சி பிரிலிமில் தேர்ச்சி பெறும் ஒரு விண்ணப்பதாரருக்கு ஒரு லட்சமும் வழங்குகிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம், சுற்றுலா, தொழில் மற்றும் சமூக நீதி உட்பட அனைத்து துறைகளிலும் மாநிலம் முன்னேறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.