தமிழகத்தில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதல்வர் விளக்கம்!
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ள நிலையில், பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி எப்போது? என முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை கூட்டம்:
தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், சட்டப்பேரவை வரலாற்றில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு முதல் முறையாக தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இன்று சட்டப்பேரவை பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், நிதிநிலை அறிக்கை என்பது குட்டிப்பூனையை தாய்ப்பூனை கவ்வுவது போல் இருக்க வேண்டும். ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பூனை எலியை கவ்வுவது போல உள்ளது. எனக்கு பொருளாதாரம் தெரியாது. ஆனால், மக்களின் பசியும், ஏழ்மையும் தெரியும். டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அடிப்படையே அதிமுக அரசு கொண்டு வந்த மடிக்கணினி திட்டம் தான் என தெரிவித்தார்.
அதன் பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்து இன்னும் வழங்காமல் உள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து எக்காரணத்தாலும் பின்வாங்க மாட்டோம். நிதி பற்றாக்குறையை சரி செய்து தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிச்சயமாக நிறைவேற்றுவோம். வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை எனக்கூறி நாங்கள் தப்பித்துக் கொள்ள பார்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடியில் பல குறைகள் உள்ளன. அதை எல்லாம் சரி செய்து பிறகு கடன் தள்ளுபடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகள் ஆதாரத்துடன் மானிய கோரிக்கை விவாதத்தில் எடுத்துரைக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.