WhatsApp செயலியை பயன்படுத்தும் பலரும் அதில் உள்ள ஸ்டேட்டஸ் அம்சத்தை உபயோகிக்க தெரியாதவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கான சில முக்கிய வழிகாட்டுதல்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
WhatsApp ஸ்டேட்டஸ்:
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு சாதனங்களில் ஒன்றாகும். இந்த வாட்ஸ் அப் செயலியின் பயனர்கள் தகவல்களை அனுப்பவும், பெறவும் மட்டுமல்ல ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுகிறது. அதே போல வாட்ஸ் அப் செயலியில் அப்டேட் செய்யப்படும் ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே மறைந்து விடும் திறனுடன், டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்டேட்டஸ்களில் அனுமதிக்கிறது.
இந்த அம்சங்களை பயன்படுத்தி உங்கள் ஸ்டேட்டஸ்களை நீங்கள் மற்றவர்களுடன் பகிர வேண்டும் என்றால் உங்களுடன் தொடர்பில் உள்ளவர்களின் தொலைபேசி எண்களை முதலில் மொபைலில் சேமிக்க வேண்டும். பிறகு உங்கள் வாட்ஸ் அப் கணக்கில் அப்டேட் செய்யப்படும் ஸ்டேட்டஸ்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இவ்வகையான ஸ்டேட்டஸ்களை Android சாதனத்தில் பகிர்ந்து கொள்ளும் முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலில் உங்கள் வாட்ஸ் அப்பை செயலியை திறந்து Status எனும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து My Status என்பதை கிளிக் செய்யவும்.
உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.
அதில் நீங்கள் அனுப்ப விரும்பும் ஸ்டேட்டஸை செலக்ட் செய்து அடுத்து Tap செய்யவும்.
பின்னர் Tap Forward கொடுக்கவும்.
நீங்கள் அதிகமான ஸ்டேட்டஸ்களை அனுப்ப விரும்பினால், அனைத்தையும் தேர்ந்தெடுத்து Tap Forward கொடுக்கவும்.
ஸ்டேட்டஸ்களை வாட்ஸ் அப் குழுவுக்கு அனுப்ப விரும்பினால், தேர்வு செய்தவுடன் Tap Forward கொடுக்கவும்.
அப்டேட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களுக்கு பதிலளிக்க,
முதலில் வாட்ஸ் அப் செயலியில் STATUS ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
அதில் மற்றவர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட் காணப்படும்.
அவற்றுக்கு பதிலளிக்க விரும்பினால், ஸ்டேட்டஸ்களை பார்த்துக்கொண்டிருக்கும். போதே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் REPLY ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
பிறகு அதில் டைப் செய்து செய்திகளை அனுப்பலாம்.
ஐபோன் பயன்பாடுகளில் ஸ்டேட்டஸ் பகிர்ந்து கொள்ள,
உங்கள் ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ் அப் செயலியை திறக்கவும்.
பின்னர் ஸ்டேட்டஸ் பக்கத்துக்கு செல்லவும்.
இப்போது My Status என்பதை தேர்வு செய்யவும்.
இதில் நீங்கள் பல ஸ்டேட்டஸ்களை அனுப்ப விரும்பினால், Tap More கொடுக்கவும்.
பிறகு Tap Forward செய்யவும்.
இவ்வாறு செய்கையில் உங்கள் ஸ்டேட்டஸ்கள் மற்றவர்களுக்கு பகிரப்படும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.