CBSE 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியீடு – 5 முக்கிய விபரங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 26, 2021

Comments:0

CBSE 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியீடு – 5 முக்கிய விபரங்கள்!

மத்திய இடை நிலைக்கல்வி வாரியம் இந்த வாரத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண்களை வெளியிட உள்ளதாகவும், அதனை தொடர்ந்து விரைவில் 10ம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை வெளியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
CBSE தேர்வு முடிவுகள்:
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான விரிவான மதிப்பீட்டு திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதில், இதற்கு முன்னர் எழுதிய பொதுத்தேர்வுகள், அலகுதேர்வுகள், இடைப்பருவத் தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் போன்றவற்றின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

ஜூலை 31க்குள் 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் மாநில மற்றும் மத்திய கல்வி வாரியங்களுக்கு உத்தரவிட்டது. 12 ஆம் வகுப்பு முடிவுகளை தயாரிப்பதற்காக பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதனால், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ கல்வி வாரியம் எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து விரைவில் 10ம் வகுப்பு முடிவுகளும் வெளியிடப்படும்.

இந்நிலையில், சிபிஎஸ்இ வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்து அவசியம் கொள்ள வேண்டிய 5 முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவை, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான அதிகாரபூர்வ இணையதளம் cbseresults.nic.in. ஆகும். மேலும், இது தவிர, digilocker.gov.in தளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

இந்த தளங்களிலிருந்து முடிவுகளை பதிவிறக்குவதற்கான உள்நுழைவு சான்றுகள் என்ன என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

எஸ்எம்எஸ், ஐவிஆர்எஸ் மற்றும் உமாங் பயன்பாடு வழியாகவும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ தேர்ச்சி சான்றிதழ்கள், மதிப்பெண்கள் மற்றும் இடம்பெயர்வு சான்றிதழ்கள் டிஜிலாக்கர் தளத்தில் கிடைக்கும். அதில், ‘கல்வி’ பிரிவின் கீழ் உள்ள ‘சிபிஎஸ்இ’ என்பதைக் கிளிக் செய்து மாணவர்கள் தங்கள் ஆவணங்களை வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகளுக்குப் பிறகு, பல்கலைக்கழகங்கள் இளங்கலை சேர்க்கை செயல்முறையைத் தொடங்கும். ஆகஸ்ட் 2 ஆம் தேதி யுஜி சேர்க்கை பதிவைத் தொடங்குவதாக டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய ஆணையம் தனது 2021-22 வழிகாட்டுதல்களில் 12 ஆம் வகுப்பு முடிவுகள் வெளிவந்தவுடன் பல்கலைக்கழகங்கள் யுஜி சேர்க்கைகளை தொடங்கும் என்றும், செப்டம்பர் இறுதிக்குள் இந்த செயல்முறையை முடிக்கும் என்றும் கூறியுள்ளது. புதிய கல்வி அமர்வுக்கான வகுப்புகள் அக்டோபரில் தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இயின் மாற்று மதிப்பீட்டு திட்டத்தில் திருப்தி இல்லாத மாணவர்கள் மற்றும், மதிப்பெண்களை மேம்படுத்த விரும்பும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பின்னர் நடக்க இருக்கும் நேரடி தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். துணை தேர்வுகளை பற்றிய அறிவிப்பை கல்வி வாரியம் பின்னர் அறிவிக்கும்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் வெளியிடப்படாது என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews