தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு – இம்மாதம் முதல் திருத்தப்பட்ட ஊதிய அளவீடுகள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 26, 2021

Comments:0

தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு – இம்மாதம் முதல் திருத்தப்பட்ட ஊதிய அளவீடுகள்!!

தெலுங்கானா மாநிலத்தில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஊதிய திருத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதை அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் திருத்தப்பட்ட ஊதிய அளவீடுகள் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊதிய உயர்வு

தெலுங்கானா மாநில அரசுத்துறைகளில் வேலை பார்த்து வரும் ஊழியர்களது மாத ஊதியத்தில் உயர்வு அளிப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு மே மற்றும் ஜூன் மாதங்களில் கொடுக்கப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த ஊதியத்தை அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், மாநில அரசு ஊழியர்கள் இந்த மாதம் முதல் 30% ஊதிய உயர்வு பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வெவ்வேறு பிரிவுகளில் உள்ள அனைத்து ஊழியர்களிடமிருந்து விருப்பங்களைப் பெறுவதற்கான பயிற்சி முடிந்துள்ளது. பின்னர் இந்த தகவல்கள் அனைத்தும் ஊதியம் மற்றும் கணக்கு அலுவலகம், கருவூல இயக்குநருக்கு அனுப்பப்படுகிறது. ஊதிய உயர்வு தொடர்பாக மூத்த அதிகாரிகளின் கூற்றுப்படி, கணக்குகள் புதுப்பிக்கப்பட்டு, இந்த மாதத்திலிருந்து திருத்தப்பட்ட ஊதியத்தை செயல்படுத்த பில்கள் தயாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்திலிருந்து திருத்தப்பட்ட ஊதிய கட்டமைப்பை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை நிதித்துறை நிறைவு செய்திருந்தது. அதற்கேற்ப துணை பில்கள் உருவாக்கப்பட்டு PAO மற்றும் கருவூல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் ஜூன் மாதத்திற்கான கூடுதல் தொகைகளை வரவு வைக்கும் செயல்முறைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. ஜூலை மாதத்திற்கான சம்பள பில்கள் தயாரிக்கப்படுவதற்கு சில நாட்களில் இது முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று ஊழியர்களுக்கு ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திருத்தப்பட்ட ஊதியத்தை அமல்படுத்துவதற்கு புதிய மென்பொருளின் உருவாக்கத்தில் கால தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது, ஊழியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சனைகளை நிதித்துறை அலுவலகங்கள் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews