கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்த அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், சில மாநிலங்கள் தங்களின் பாடதிட்டங்களின் அடிப்படையில் பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், ஜூலை 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கர்நாடக அரசு பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்தவுள்ளது. ஆனால், இதை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தேர்வுகளை நடத்தினால் மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று (ஜூலை 12) விசாரித்த பி.வி. நாகரத்னா, ஹன்சேட் சஞ்சீவ் குமார் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொது நல மனுவைத்தள்ளுபடி செய்தனர்.
தேர்வுகளை நடத்த இதுவே சரியான நேரம் என தெரிவித்த நீதிமன்றம், கரோனா பரவல் 1.48 சதவிகிதமாக குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டது.
"கரோனா தொழில்நுட்ப நிபுணர் குழு வழங்கிய ஆலோசனைப்படி மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் தேர்வுகளை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது" எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்துள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.