தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பானது குறைந்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்க வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் வெகுவாக வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி மஹாராஷ்டிரா, உத்திர பிரதேஷம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதாவது தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா பரவலை ஒட்டி கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி முறையில் தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பானது அல்ல என கருதிய தமிழக அரசு கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் தேர்வுகளை ரத்து செய்தது. இதை தொடர்ந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் முக்கியம் என்பதால், அவர்களுக்காக மதிப்பெண்களை வழங்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. மறுபக்கத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் கல்வி தொலைக்காட்சி வழியாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, ‘ஆன்லைன் வழியாக பள்ளி மாணவர்களுக்கு முழுமையான பாடங்களை நடத்த முடியவில்லை என்பதால் வரும் நாட்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள உயர்கல்வி மாணவர்களுக்காக மட்டும் பள்ளிகளை மீண்டுமாக திறக்க வேண்டும்’ என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.