ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் பணியாளர் தேர்வுக்கான முதன்மை தேர்வுகளை ரத்து செய்வதாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிப்பதாகவும் அறிவித்துள்ளது.
APPSC அறிவிப்பு:
ஆந்திர மாநிலத்தில் அரசுப் பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் அனைவரும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதுவரை ஆந்திர அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் வெளியிட்டுள்ள 32 அறிவிப்புகளில் 30 அறிவிப்புகளை செயல்படுத்தி முடித்து விட்டது. குரூப் 1 மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கான பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படாமல் உள்ளது.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் ஷேக் சலாம் பாபு அவர்கள் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆந்திர மாநிலத்தில் குரூப் 1 தேர்வுகளை தவிர மற்ற அனைத்து தேர்வுகளிலும் முதன்மை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், அனைத்து பணியிடங்களிலும் 10% இடஒதுக்கீடு பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தின் அருகே போராட்டம் நடத்திய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,180 பதவிகளுக்கான அறிவிப்புகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் பாபு அவர்கள் கூறினார். வேலையில்லாத இளைஞர்கள் நிரப்பப்பட வேண்டிய பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லப்பட்டு, மாநில அரசு அதற்கு சாதகமாக பதிலளித்துள்ளது என்றும் கூறி உள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.