IDBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய கட்டண விவரம் விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 17, 2021

Comments:0

IDBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய கட்டண விவரம் விளக்கம்!

IDBI வங்கியில் நிலையான வைப்பு (FD) விகிதங்கள் சில முதிர்வு காலங்களுக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண விதிகள் ஜூலை 14 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதையடுத்து அதன் முழு விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

FD மாற்றம்

வங்கிகளில் புதிதாக கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு திட்டங்களில் முக்கியமான அம்சங்களை நிலையான வைப்பு (FD) கணக்கு வழங்குகிறது. இந்த FD கணக்கு மூலம் வாடிக்கையாளர்கள் பெருமளவு வட்டி விகிதங்களை பெற முடியும். மேலும் இவ்வகை FD கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதமானது ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறுபடுகிறது. இந்நிலையில் நிலையான வைப்புத்தொகைக்கான (FD) விகிதங்களை மாற்றியுள்ள IDBI வங்கி கடந்த 14 ஆம் தேதி புதிய கட்டணத்தை அமல்படுத்தியுள்ளது. சமீபத்தில் திருத்தப்பட்ட IDBI வங்கியின் FD விகிதங்கள் இப்போது 7 நாட்கள் முதல் 20 ஆண்டுகள் வரையுள்ள முதிர்வு காலத்துடன், அனைத்து நிலையான வைப்பு தொகைகளுக்கும் 2.7% முதல் 4.8% வரை வட்டியை அளிக்கின்றன. அந்த வகையில் IDBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சமீபத்திய வட்டி விகிதங்களை பொருத்தளவு,

முதலாவதாக 7 முதல் 14 நாட்கள் மற்றும் 15 முதல் 30 நாட்களில் முதிர்ச்சியடைந்த நிலையான வைப்புகளுக்கு ஒரு ஆண்டுக்கு 2.7% வட்டியை IDBI வங்கி வழங்குகிறது.

அடுத்து 31 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடைந்த FD களுக்கு ஆண்டு அடிப்படையில் 2.8% வட்டியை வழங்குகிறது. மேலும் 46 முதல் 90 நாட்களுக்கு இடையில் முதிர்ச்சியடையும் கணக்குகளுக்கு வருடாந்திர அடிப்படையில் 3% வட்டி கொடுக்கப்படுகிறது.

தவிர 91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை முதிர்ச்சியடைந்த FDகளுக்கு 3.5% வட்டி கொடுக்கப்படுகிறது.

தொடர்ந்து ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு 4.3% வட்டி வரை அதன் முதலீட்டாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FDக்கு 5.1% வட்டி கிடைக்கிறது.

ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு 5.25% வட்டி விகிதத்தை IDBI வங்கி வழங்குகிறது.

கடைசியாக, முதலீட்டாளர்கள், 10 முதல் 20 ஆண்டு வரை முதிர்ச்சியடையும் FDக்களில் 4.8% வட்டி விகிதத்தை பெறுவார்கள். இதற்கிடையில், மூத்த குடிமக்களின் அனைத்து வகையான நிலையான வைப்புகளுக்கும் IDBI வங்கி கூடுதலாக 50 bps வட்டி விகிதத்தை வழங்குகிறது. தற்போது, IDBI வங்கி 3.2% முதல் 5.3% வரை வட்டி விகிதங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews