பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 19 ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்குமான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதாக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் டி லாசர் தெரிவித்துள்ளார்.
செமஸ்டர் தேர்வுகள்
கொரோனா 2 ஆம் பரவல் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக தேர்வுகளை நடத்துவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் வழியாக நடத்த உள்ளதாக பல்கலைக்கழக தேர்வுகளின் கட்டுப்பாட்டாளர் டி லாசர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த தகவலை பல்கலைக்கழகம் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள தேர்வு கட்டுப்பாட்டாளர், மாணவர்களுக்கான வினாத்தாள்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளார். இது தவிர மாணவர்கள் அனைவரும் A4 காகிதத்தில் கருப்பு நிற மையால் எழுத வேண்டும் எனவும் மூன்று மணி நேரம் நடைபெறும் தேர்வுகளை மாணவர்கள் எழுதி முடித்த பிறகு, விடைத்தாள்களை ஸ்கேன் செய்து 30 நிமிடங்களுக்குள் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடைத்தாள்களின் முன்பக்கத்தில் கல்லூரியின் அச்சுப்பொறியை ஒட்டி, அந்தந்த கல்லூரி முதல்வர்கள் தேர்வு நடைபெறும் நாளில் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இளங்கலை, முதுகலை மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் தேர்வுகள் பொருந்தாது என கூறப்பட்டுள்ள நிலையில் அம்மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை பல்கலைக்கழகம் வெளியிடவில்லை. இது தவிர நேரம் அனுமதித்தால் செய்முறை தேர்வுகளை நேரடி முறையில் நடத்த பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.