தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து, கல்வியியல் கல்லூரிகளில் B.Ed., படிக்கும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜூலை 12 ஆம் தேதி முதல் ஆன்லைனில் துவங்குவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
செய்முறை தேர்வுகள்:
கொரோனா பேரலை காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து அறிவியல், கலை, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் ஆசிரியர் பணிக்கான B.Ed பட்டப்படிப்புகளை படித்து வரும் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டப்படிப்பு முடித்து பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என விரும்புபவர்கள் கல்வியியல் கல்லுாரிகளில் B.Ed., பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கொண்ட இந்த படிப்பில் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் எழுத்துத்தேர்வும், 2 ஆம் ஆண்டில் செய்முறை தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளது.
அதாவது இம்மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளில் அவர்களின் கற்பித்தல் திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த கல்வியாண்டில் கொரோனா 2 ஆம் பரவல் காரணமாக கல்வியியல் கல்லூரி மாணவர்கள், பள்ளிகளுக்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்ளாததால் அவர்களுக்கு ஆன்லைன் வழியாக செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜூலை 12 ஆம் தேதி முதல் B.Ed., மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் கற்பித்தல் திறன் மற்றும் செய்முறை பதிவேடுகள் தொடர்பாக அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட இருப்பதாகவும், அதில் 90% க்கு அதிகமாக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் மறுதேர்வு நடத்தப்பட்டு, அவை இறுதி மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.