‘தமிழகத்தில்11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை’
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிலேயே (2021-22) மாண வர்கள் சேர்க்கை நடைபெறும் என மாநில மருத்துவக் கல்வி இயக்கு நர் ஆர்.நாராயணபாபு கூறினார்.
ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 1,500 மாணவர்கள் நடப்புக் கல்வியாண்டில் சேர்க்கப்படவுள்ளனர். மத்திய மருத்துவக் குழு ஓரிரு வாரங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆய்வை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவர் களுக்கான உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு பேராசிரியர்கள், உத விப் பேராசிரியர்கள் அனைவரும் தயாராக உள்ளனர். புதிதாக 170 மருத்துவர்கள், 212 செவிலியர்கள், 145 மருத்துவ மனை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேவைப்படும் காலிப்பணியிடங்களையும் கலந்தாய்வு மூலம் நிரப்பவுள்ளோம் என் றார். ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதன்மையர் எம்.அல்லி, கண்காணிப்பாளர் மலர்வண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.