வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – சென்னை காவல்துறை அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 26, 2021

Comments:0

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – சென்னை காவல்துறை அறிவிப்பு!

சமீப காலமாக நாடு முழுவதும் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதால், சென்னை மாநகர காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
சைபர் கிரைம் குற்றங்கள்:

சமீப காலத்தில் KYC மோசடி தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவாகி வருகிறது. இதனால், ஆன்லைன் மோசடி அதிகரிப்பிற்கு எதிராக பல புகார்கள் எழுந்துள்ளது. நாடு முழுவதும் மோசடி செயல்கள் அதிகரித்து வருவதால் அனைத்து வங்கி நிர்வாகத்தினரும் அதிகாரபூர்வ அறிக்கை மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது போன்ற ஆன்லைன் மோசடி வழக்குகள் அனைத்தையும் சைபர் கிரைம் துறையின் https://www.cybercrime.gov.in/ என்ற முகவரியில் தெரிவிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடுவது மற்றும் தனிமனித தகவல்களை திருடி அதன் மூலம் அவர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக சமூக ஊடக பக்கங்களில் போலியான விளம்பரங்கள் மூலமாக மோசடி லிங்க்களை பரவ விடுகின்றனர். இதனை நாம் கிளிக் செய்வதன் மூலம் நமது தகவல்களை அவர்கள் கைப்பற்ற தொடங்கி விடுகின்றனர். இதற்காக சென்னை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். மேலும், எச்சரிக்கை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதிகாரிகள் தெரிவித்துள்ள அறிக்கையில், வங்கி மூலமாக வருவது போல் ஒரு லிங்க் மெசெஜ் அனைத்து செல்போன் எண்ணிற்கும் வருகிறது. அதில் உள்ள லிங்க் ஐ அழுத்தி உங்களது Kyc/pan card/ aadhar card விவரங்களை பதிவிடும்படியும், அப்படி இல்லையென்றால் வங்கி கணக்கு முடங்கி விடும் என்றும் தெரிவிக்கப்படும். இப்படி செய்வதால் உங்களது வங்கி கணக்கு உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் திருடப்பட்டு விடுகிறது. மேலும், மோசடி கும்பல் உடனடியாக ஏடிஎம் மூலமாகவும், ஷாப்பிங் மூலமாகவும் பணத்தை திருடி விடுகின்றனர்.

எனவே, இதுபோன்ற போலியான விளம்பரங்களையும், மெசேஜ்களையும், லிங்க்களையும் நம்பி பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், எந்த வங்கியிலிருந்தும் இது போன்ற மெசேஜ் அனுப்பமாட்டார்கள் எனவும் சென்னை போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews