Breaking

Monday, July 26, 2021

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை – முழு விபரம் இதோ!

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை – முழு விபரம் இதோ!
தற்போது ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் அதிக வங்கி விடுமுறை நாட்கள் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வர இருக்கும் ஆகஸ்ட் மாதத்திலும் அதிக விடுமுறை வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. முன்னதாக கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் பகுதி நேரமாக மட்டுமே செயல்பட்டு வந்தது. அதிலும் அத்தியாவசிய 4 சேவைகள் மட்டுமே வங்கிகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது பல மாநிலங்களில் வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கி விட்டது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஜூலை மாதத்தில் வழக்கத்தை விட அதிகமாக வங்கிகளுக்கு அதிகாரபூர்வ விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டது. வழக்கமான வார இறுதி நாள் விடுமுறையையும் சேர்த்து மொத்தம் 15 நாட்கள் விடுமுறை தினங்கள் வந்தது. ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் வர இருக்கும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 15 விடுமுறை தினங்கள் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மாநிலத்திற்கேற்ப பண்டிகை நாட்கள் மற்றும் திருவிழாக்களை பொறுத்து விடுமுறை தினங்கள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தமிழகத்தில் ஆறு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் வங்கி பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. விடுமுறை பட்டியல்:

1, ஆகஸ்ட் 2021 ஞாயிற்றுக்கிழமை
8, ஆகஸ்ட் 2021 – ஞாயிற்றுக்கிழமை
13, ஆகஸ்ட் 2021 – திங்கட்கிழமை – Martyrdom Day (Imphal)
14, ஆகஸ்ட் 2021 – இரண்டாவது சனிக்கிழமை
15 ஆகஸ்ட் 2021 – ஞாயிற்றுகிழமை – சுதந்திர தினம்* அரசு விடுமுறை
16, ஆகஸ்ட் 2021 – திங்கட்கிழமை – பார்சி புத்தாண்டு – மகராஷ்டிராவின் பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர் மண்டலங்கள்
19, ஆகஸ்ட் 2021 – வியாழக்கிழமை – முஹர்ரம் / ஆஷுரா* அரசு விடுமுறை
20, ஆகஸ்ட் 2021 – வெள்ளிக் கிழமை 21, ஆகஸ்ட் 2021 – Muharram/First Onam – பெங்களூரு, சென்னை, கொச்சி, மற்றும் கேரளா மண்டலங்கள்
21, ஆகஸ்ட் 2021 – சனிக்கிழமை – ஓணம் – கொச்சி, கேரளா
22, ஆகஸ்ட் 2021 – ஞாயிற்றுகிழமை – ரக்ஷா பந்தன் (ராக்கி)* ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
23, ஆகஸ்ட் 2021 – திங்கட்கிழமை – ஸ்ரீ நாரயண குரு ஜெயந்தி – கொச்சி, கேரளா
28, ஆகஸ்ட் 2021 – நான்காவது சனிக்கிழமை
29, ஆகஸ்ட் 2021 – ஞாயிற்றுக்கிழமை
30, ஆகஸ்ட் 2021 – திங்கட்கிழமை – ஜன்மாஷ்டமி – அரசு விடுமுறை
31, ஆகஸ்ட் 2021 – செவ்வாய் கிழமை – ஸ்ரீ கிருஷ்ணா அஷ்டமி – ஹைதராபாத்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog