மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பெயரை, ஐ.ஐ.டி சென்னை என்று மாற்றும் திட்டம் இல்லை என்று இன்று மழைக்கால கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.
பெயர் மாற்றம்:
நடப்பாண்டில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு முன்னதாகவே, மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், நாட்டின் எந்த மாநிலத்தின் மீதும் மொழி திணிப்பு இருக்காது.
மும்மொழி கொள்கை குறித்து மாநில அரசுகள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமே இறுதியானது என்று அறிவித்தார். பாராளுமன்ற கூட்டத்தில் நாட்டின் கொரோனா பரவல் நிலைமை, பாதிப்புகள், நாட்டின் பொருளாதாரம், கொரோனா முன்னேற்பாடு பணிகள், தடுப்பு நடவடிக்கை போன்றவற்றை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்நிலையில், மெட்ராஸ் ஐ.ஐ.டி யின் பெயரை மாற்றுவது குறித்து இன்று பதில் அளித்துள்ளார். ஐ.ஐ.டி பம்பாய் நிறுவனம் 1958 ம் ஆண்டு மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் 1959ம் ஆண்டும் தொடங்கப்பட்டது. பம்பாய் மற்றும் மெட்ராஸ் நகரங்களின் பெயர்கள் பின்னர் முறையே மும்பை மற்றும் சென்னை என மாற்றப்பட்டாலும், இந்த இரண்டு இடங்களில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனங்களும் பழைய பெயர்களிலேயே உள்ளது. இந்நிலையில், மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பெயரைத் திருத்துவதற்கான எந்தவொரு திட்டம் குறித்தும் மத்திய அரசு ஆலோசனையில் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.