தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் விநியோகிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய கல்வியாண்டு:
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021 – 2022ம் கல்வியாண்டுக்கான 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அச்சுறுத்தல் மற்றும் அதனை தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கோடை விடுமுறை போன்ற காரணங்களால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 14ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.
இதனால் தலைமை ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் சில ஆசிரியர்கள் ஜூன் 14ம் தேதி முதல் பணிக்கு வரவும் கேட்டுக் கொள்ளப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. விரைவில் பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாட புத்தகங்களை வழங்கும் போது அரசு அறிவுறுத்தியுள்ள அனைத்து நோய் தடுப்பு விதிமுறைகளும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கு மாணவிகள் சேர்க்கை பணிகளும் கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டது. பாட புத்தகங்களை பெறுவதற்கு மாணவிகள் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டு அழைக்கப்பட்டுள்ளனர் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.