Breaking

Wednesday, July 07, 2021

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கக்கோரி வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடங்கப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சத்துணவு வழங்கல்:

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தினசரி சத்துணவு வழங்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக சமைக்கப்படாத தானியங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிகளில் கட்டாயம் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு கிடைக்கும் வகையில், அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய கூடங்கள் மூலமாக சமைக்கப்பட்ட உணவு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் சமைக்கப்படாத உணவுகள் வழங்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் சமைக்கப்பட்ட ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், இது குறித்து மத்திய அரசு பதில் மனு அளிக்க வேண்டும் என தெரிவித்தது. இது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog