தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரசின் தளர்வுகள் அடிப்படையில் வேளாண் பல்கலையில் பயின்று வரும் முதுகலை பி.எச்டி., மாணவர்களுக்கு வருகிற 12 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்காமல் இருக்க ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் அரசின் துரித நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. இதனால் ஜூலை 5 ஆம் தேதிக்கு பின்னர் சில கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முதுகலை ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும் மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும் முதுநிலை, பி.எச்டி., மாணவர்களுக்கு கல்லூரிகள், வரும் 12ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண்மை உறுப்பு கல்லூரிகளில் மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், அனைத்து துறைகளிலும் கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.