நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் திறந்தநிலை, தொலைதூர கல்வி படிப்புகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என யூஜிசி தெரிவித்துள்ளது.
யூஜிசி அறிவிப்பு:
இந்தியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம், செயல்முறைகள் ஆகியவற்றை யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு வழங்குகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன. கல்லூரிகள் திறப்பு குறித்து கூடிய விரைவில் முடிவு எடுக்க இருப்பதாக யூஜிசி அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், செமஸ்டர் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக திறந்த நிலை, தொலைதூர கல்வி படிப்புகள் நடத்த விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்தநிலை, தொலைதூர ஆன்லைன் படிப்புகளுக்கு ஒருமுறை பதிவுக் கட்டணமாக ரூ.25000 செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூர கல்வியில் படிப்புகளை தொடங்க ரூ.10000 முதல் ரூ.50000 வரை பாடத்திற்கேற்ப கட்டணம் கட்ட வேண்டும் என இது குறித்த வழிமுறைகளை யூஜிசி வெளியிட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.