ICSE மற்றும் ISC பாடத்திட்டங்கள் குறைப்பு – CISCE தகவல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

ICSE மற்றும் ISC பாடத்திட்டங்கள் குறைப்பு – CISCE தகவல்!

ICSE, 10 மற்றும் ISC ன் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான பாடத்திட்டங்களை குறைப்பதாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (CISCE) அறிவித்துள்ளது. தேவை ஏற்படின் மேலும் சில பாடங்கள் குறைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


பாடத்திட்டங்கள் குறைப்பு

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (CISCE) பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை குறைத்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு உருவான கொரோனா பேரிடர் நிமித்தமாக ஏறத்தாழ அனைத்து பள்ளிகளிலும் பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. அதாவது ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருவதால், குறைவான கற்றல் திறன் காரணமாக, தேர்வுகளின் போது எவ்வித சிக்கல்களும் உண்டாகாத வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. தவிர CBSE பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. இதனிடையே இந்த புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தையும் குறைப்பதாக CISCE அறிவித்துள்ளது. அதன் படி ICSE மற்றும் ISC மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் வேறு சில மொழிகளுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ICSE பாடத்திட்டத்தில் வரலாறு மற்றும் குடிமை, புவியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளாதாரம், வணிக ஆய்வுகள், கணினி பயன்பாடுகள், பொருளாதார பயன்பாடுகள், வணிக பயன்பாடுகள், சுற்றுச்சூழல் பயன்பாடுகள், வீட்டு அறிவியல், உடற்கல்வி, யோகா உள்ளிட்ட பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல ISC பாடத்திட்டத்தில் கணக்குகள், வர்த்தகம், பொருளாதாரம், வணிக ஆய்வுகள், வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், சமூகவியல், உளவியல், கணினி அறிவியல், பயோடெக்னாலஜி, சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து பாடங்களுக்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை CISCE இணையதளம் மூலம் சரிபார்த்து கொள்ளலாம். இது தவிர மாணவர்களுக்கான பிற பாடத்திட்டங்களை மறு ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், மீதமுள்ள பாடத்திட்டங்களைக் குறைத்த பின்னாக அவை விரைவில் CISCE இணையதளத்தில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொடுக்கப்பட்ட பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும் தேவைப்படும் போது இவை மேலும் குறைக்க உதவும் என விளக்கம் கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews