தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி கட்டணம் 75 சதவிகிதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 85% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கல்விக் கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 75 சதவிகித கட்டணத்தை 3 தவணையாக வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
2021-2022 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 31 வரை 40 சதவீதம் கல்விக் கட்டணம் மட்டுமே வசூலித்து கொள்ள வேண்டும். பின்னர் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதும் மீதமுள்ள 25 சதவிகிதம் வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கு 85% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதாவது தனியார் பள்ளிகள் 85% கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்டணத்தில் சலுகை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் நீக்கப்பட மாட்டார்கள் எனவும் பள்ளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வேலைவாய்ப்பை இழந்தவர்கள் அது குறித்து பள்ளிகளில் முறையிடலாம் எனவும், கல்வி கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.