தமிழகத்தில் மாதந்தோறும் 500 பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 11, 2021

Comments:0

தமிழகத்தில் மாதந்தோறும் 500 பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு ஒரு சிறந்த வேலை வாய்ப்பு திட்டத்தை பெற்று தரும் நோக்கத்தில், சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த உள்ளதாகவும், மாதந்தோறும் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பு

நாடு முழுவதும் கொரோனா பேரலை நிமித்தமாக பலரும் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உருவான கொரோனா பேரலையால் பலரது வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டு, அவர்களது குடும்பங்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை அளிப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் வேலை இழந்துள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, மாதந்தோறும் 500 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது ‘திசை காட்டும் திருச்சி வேலைவாய்ப்பு முகாம்’ என்ற பெயரில் திருச்சி இளைஞர்களுக்காக இணைய வழி வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 வரை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதாவது மாதந்தோறும் சுமார் 500 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த முகாம்கள் நடைபெற இருக்கிறது. இதில் முதல் கட்டமாக நடைபெற உள்ள முகாமில் 100க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.aramhr.com என்ற இணையதளம் மூலமாகவும், 8566992244 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவதால் இவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இளைஞர்கள் நேர்காணலை எதிர்கொள்வதற்காக சிறப்பு பயிற்சிகளும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews