கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் கடந்த ஆண்டிற்கான பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து அமலில் உள்ள ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு பல்வேறு பள்ளிகளில் இணையவழி கல்வி தொடங்கப்பட்டு உள்ளது. அதற்காக அனைத்து மாணவர்களிடம் இருந்து அவர்களின் வாட்ஸ்அப் எண் பெறப்பட்டு உள்ளது. மேலும் இந்த எண்ணைக் கொண்டு அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் மூலம் குழுக்கள் தொடங்கப்பட்டு உள்ளது. அதன் வாயிலாக பாடக்குறிப்பு, அதற்கான வீடியோ லிங்க், பயிற்சி பெற விபரம் உள்ளிட்டவைகள் அனுப்பப்பட்டு, வீட்டு பாடங்களும் அதன் மூலமாகவே பெறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களிடம் ஆன்லைன் வசதி இல்லை என்பது போன்ற பல காரணங்களை கூறி ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாமலும் வகுப்புகளை தொடங்காமலும் உள்ளனர். இது பெற்றோர் மத்தியில் மிகுந்த அதிருப்தி மற்றும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.