தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் நிலையில் மாணவர்களின் கற்றல் திறன் நலன் கருதி ஜூலை 3வது வாரத்தில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த மே மாதம் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழக அரசு தற்போது வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் பி.கே.இளமாறன் அவர்கள் அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கற்றல்-கற்பித்தல் பணிகள் முடக்கத்தில் உள்ளது. மாணவர்களுக்கு தற்போது கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும் கல்வி முழுமையாக பயன் தராது. தமிழகத்தில் 36 ஆயிரத்தை கடந்த வந்த கொரோனா தொற்று தமிழக முதல்வரின் நடவடிக்கை காரணமாக 90% தொற்று குறைந்துள்ளது. மக்கள் வாழ்க்கையும் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆகையால் மாணவர்களின் நலன் கருதி முடங்கியிருக்கும் கற்றல் பணியை தொடங்க பள்ளிகளை திறக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகிறது. குறிப்பாக தொடக்க கல்வி மாணவர்கள் எழுத்துக்களே மறந்துபோகும் நிலை உருவாகியுள்ளது. மேலும் உயர் நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து வருகிறது. தற்போது பரவல் குறைந்து வரும் காரணத்தால் 9 முதல் 12 ஆம் வகுப்புகளை தினந்தோறும் 5 பாட வேலைகளுடனும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையிலும் பள்ளிகள் இயங்க வழிவகை செய்ய வேண்டும். அதேபோல் பள்ளிகள் திறந்தவுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆலோசனை பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும். தேவையான அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் சானிடைசர், சோப்பு உள்ளிட்டவைகளுடன் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும். எனவே தற்போதைய சூழலில் கல்வியின் தேவையறிந்து மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை ஜூலை 3 ஆம் வாரத்தில் தொடங்க வழிவகை செய்யும்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.