Breaking

Monday, July 05, 2021

2021-22 கல்வியாண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 93,445 பேர் சேர்ந்துள்ளனர்: அதிகாரிகள் தகவல்

சென்னையில் மொத்தம் 281 பள்ளிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேறி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2020-21 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மொத்த மாணவர்கள் 93,445 இவற்றில் தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி 12,471 மாணவர்களும், புதிதாக 18,991 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.இதையடுத்து 2021-22 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை கடந்த 14ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் சேர்க்கை தொடங்கி கிட்டத்தட்ட 20 நாட்களில் புதிதாக 18,991 மாணவர்களும், தனியார் பள்ளிகளில் இருந்து 12,471 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இன்னும் மாணவர்கள் சேர்க்கை நடந்துகொண்டு தான் இருக்கிறது. இன்னும் 2 மாதங்கள் மேல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மொத்தம் 281 மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை நேற்று முன்தினம் நிலவரப்படி 93,445 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த கல்வி ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு புதிய மாணவர்கள் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து வந்த நிலையில் இந்த கல்வியாண்டில் அதிகப்படியான பள்ளி மாணவர்கள் சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog