இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான சேவை கட்டணங்களை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
சேவை கட்டணம்:
மத்திய அரசின் அஞ்சலக திட்டம் போன்று இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி என்ற சேவையும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசால் மக்களுக்கு அஞ்சலக சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி தொடங்கப்பட்டது. மற்ற வங்கிகளை போன்ற அனைத்து சேவைகளையும் ஐபிபிபி வழங்குகிறது. ஐபிபிபி வங்கி சுகன்யா சம்ரிதி கணக்கு (எஸ்எஸ்ஏ), பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தொடர்ச்சியான வைப்பு கணக்கு (ஆர்.டி) மற்றும் தொடர்ச்சியான வைப்புத்தொகைக்கு (எல்.ஐ.டி) பணம் செலுத்தும் சேவைகளையும் வழங்குகிறது.
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) தனது சேவை கட்டணங்களை மாற்றியுள்ளது. அதன்படி, புதிய கட்டண திருத்தம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் பொது காப்பீடு போன்ற சேவைகளையும் வழங்குகிறது. கட்டண மாற்றம்:
ஐபிபிபி வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை, பணம் எடுப்பது போன்ற சேவைகளைப் பெற ரூ .20 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இருப்பினும், போஸ்ட்பெய்ட் பில் செலுத்த, ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மற்ற பில் செலவுகளை செலுத்த ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
முன்னதாக ஆன்லைன் சேவைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை. இனி, ஐபிபிபி வழங்கிய அறிவிப்பின்படி, ஒவ்வொரு வாடிக்கையாளர் கோரிக்கைக்கும் ரூ.20 செலுத்த வேண்டும். சுகன்யா சமிரதி கணக்கு (எஸ்.எஸ்.ஏ), பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தொடர்ச்சியான வைப்பு கணக்கு (ஆர்.டி) மற்றும் தொடர்ச்சியான வைப்புத்தொகைக்கு (எல்.ஐ.டி) பணம் செலுத்தும் சேவைக்கு ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
ஐபிபிபி கணக்கு வைத்திருப்பவர், மற்றொரு ஐபிபிபி கணக்கு வைத்திருப்பவருக்கு பணம் அனுப்பினால், ரூ.20 மற்றும் ஜிஎஸ்டி டிஎஸ்பி கட்டணங்கள் விதிக்கப்படும்.
பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டால், ரூ .20 மற்றும் ஜிஎஸ்டி டிஎஸ்பி கட்டணங்கள் பொருந்தும்.
QR CODE மீண்டும் வழங்குவதற்கு மற்றும், UPI வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ரூ .20 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.