புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக வரும் ஜூலை 12 ஆம் தேதி முதல் தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜூலை 14 ஆம் தேதி முதல் அம்மாணவர்களுக்கான நேர்காணல் துவங்க உள்ளது.
மாணவர் சேர்க்கை
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து மாநிலங்கள் தோறும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டுமாக துவங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் 9 ஆம் வகுப்புகளில் பெற்ற இறுதி மதிப்பெண்களின் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து 11 ஆம் வகுப்பு புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டது. அந்த வகையில் புதுச்சேரி அரசுப்பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை செலுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இது குறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை கூறுகையில், ‘புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி முதல் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு, 14 ஆம் தேதி முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல் துவங்கவுள்ளது. முதலாவதாக ஜூலை 19 ஆம் தேதி அரசு உதவி பெறும்பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு, பின்னர் 21 ஆம் தேதி அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். இதை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளியில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 23 ஆம் தேதி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் உள்ள அரசுப்பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடப்பிரிவில் 4,045 இடங்கள், கலை பாடப்பிரிவில் 2,305 இடங்கள், தொழில்நுட்பப்பிரிவில் 565 இடங்கள் என மொத்தமாக 6,915 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.