10th,12th மாணவர்களுக்கு அலகுத் தேர்வுகள் நடத்துதல் சார்பாக CEO PROCEEDINGS - அலகுத் தேர்வு வழிமுறைகள் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 20, 2021

Comments:0

10th,12th மாணவர்களுக்கு அலகுத் தேர்வுகள் நடத்துதல் சார்பாக CEO PROCEEDINGS - அலகுத் தேர்வு வழிமுறைகள் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.4898/ஆ3/2020 நாள். 20.07.2021
பள்ளிக் கல்வி - கிருஷ்ணகிரி மாவட்டம் - பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு அலகுத் தேர்வுகள் நடத்துதல் தலைமை ஆசிரியர்கள் வழிகாட்டுதல்/அறிவுரைகள் வழங்குதல்- சார்பாக. முதல்வர்களுக்கு

பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் அலகுத் தேர்வுகள் நடத்துதல் வேண்டும். தேர்வுகள் நடத்துவது குறித்து கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து வகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ! முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அலகுத் தேர்வு வழிமுறைகள்
தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி இணையதள வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொள்ளவதை தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்காணிக்கவேண்டும், மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த ஆயத்த பயிற்சி மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடத்திலும் அலகுத் தேர்வுகள் மாதவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் படி அலகுத் தேர்வு நடைபெற வேண்டும்.

அலகுத் தேர்விற்கான நேரம் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை மதிப்பெண்கள் 50 ஒவ்வொரு அலகுத் தேர்விற்கான வினாத்தாட்களை இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அலகுத் தேர்வுகள் கீழ்க்கண்ட விவரப்படி ஒவ்வொரு மாத இறுதியில் நடைபெறுதல் வேண்டும். அதற்கான தேதியினை பின்னர். . ஒவ்வொரு பாட ஆசிரியரும் அப்பாடத்தினை பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர் உள்ளடங்கிய தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும்.

மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் தனித்தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும். இக்குழுவில் தலைமையாசிரியர்கள் இடம்பெறுதல் வேண்டும்.

. தேர்வு நடைபெறும் அன்று காலை 9.50 மணிக்கு தேர்விற்கான வினாத்தாளினை மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும்.

மாணவர்களை மடிக்கணினிகள் / கைப்பேசி மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து தனித்தாளில் விடைகளை எழுத அறிவுறுத்துதல் வேண்டும்.

விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர் பெயர், பாடம் மற்றும் நாள் ஆகிய விவரங்கள் எழுதப்படுதல் வேண்டும். ஜூன்/ஜூலை மாதத்திற்கான பாடங்கள் கல்வி தொலைகாட்சியில் நடத்ததப்பட்டுள்ளன,அவ்விரு மாதங்களுக்கான பாடத்திட்டத்தை சுருக்கமாக மீள ஒருமுறை மாணவர்களுக்கு நடத்திட சார்ந்த பாட ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews