தமிழகத்தில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 3,500 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இதற்காக வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை:
தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கில் தமிழறிஞர்கள் பணி செய்து வருகின்றனர். ஏராளமான கட்டுரைகளையும், இலக்கியங்களையும் படைத்து வருகின்றனர். தமிழ் மொழி வளர்ச்சியில் இவர்களின் பங்கு இன்றியமையாததாகும். தமிழகத்தில் வயது முதிர்ந்த தமிழ் பற்றுள்ள தமிழறிஞர்களுக்கு அரசு சார்பாக மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணியை சிறப்பிக்கும் வகையிலும், தொடர்ந்து தமிழ் நூல்களை எழுத ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் தமிழறிஞர்கள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2021-22 ம் ஆண்டு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை வேண்டி விண்ணப்பிப்பவர்கள் 1.01.2021 அன்று 58 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும். மேலும் தகுதி உடையோர் இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ் பணி ஆற்றியமைக்கான சான்று, வருமான வரி சான்று, தமிழ் பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலை சான்றை தமிழாசிரியர்கள் 2 பேரிடம் இருந்து பெற்று அவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவ படி ரூபாய் 500 அவர்கள் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சி அலுவலகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.