தமிழகத்தில் வங்கிகளுக்கு செல்வோர் கவனத்திற்கு – தவறாமல் படிங்க! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 26, 2021

Comments:0

தமிழகத்தில் வங்கிகளுக்கு செல்வோர் கவனத்திற்கு – தவறாமல் படிங்க!

தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தற்போது பல வித புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களுக்கான தளர்வுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா என்ற கொடிய நோய் தொற்று மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த நோய் பாதிப்பினால் இந்தியாவில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். அதே போல் தினமும் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால் கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தினை அடைந்ததால் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வந்தது. கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் பாதிப்பு எண்ணிக்கை வாரியாக பிரிக்கப்பட்டு ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் மேலும் புதிய தளர்வுகள் குறிப்பிட்ட 11 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 5 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கில் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் மற்றும் தானியங்கி பணம் வழங்கும் சேவைகள் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ சேவை மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews