தமிழகத்தில் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது என அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு:
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களின் மருத்துவர் என்ற கனவை சிதைக்கிறது. இந்த நீட் தேர்விற்கு தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களினால் தயாராக முடிவதில்லை. முற்றிலும் பாட திட்டங்கள் மத்திய கல்வி வாரியத்தின் அடிப்படையில் உள்ளதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர். அதனால் தமிழகம் நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. அதிமுக ஆட்சியிலும் போராட்டங்கள் தொடர்ந்தது. அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார். இதற்காக குரல் எழுப்பியும் வருகிறார். சமீபத்தில் டெல்லி சென்ற போது பிரதமரிடம் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தினார். மேலும் நீட் தேர்வு குறித்த பாதிப்புகள் ஆய்வு செய்ய குழு ஒன்றையும் அமைத்துள்ளார். அக்குழு தனது அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது என அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில், இந்த ஆண்டு நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய போது முதல்வர் பதிலளிக்கவில்லை. மேலும் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டுமா? வேண்டாமா? என மாணவர்கள் தவித்து வருகின்றனர். அரசு இது குறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.