சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – காவல் ஆணையர் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 07, 2021

Comments:0

சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு – காவல் ஆணையர் வெளியீடு

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வணிக காரணங்களுக்காக வாகனங்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், நாளை முதல் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளின் சிக்னல்களும் செயல்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

காவல் ஆணையர் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மருத்துவம் மற்றும் பிற அவசர தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் பயணிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக இ – பதிவு முறை கட்டாயம் ஆக்கப்பட்டது. அரசு பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினருக்காக மட்டுமே அரசு பேருந்துகள் மிகவும் குறைந்த அளவில் செயல்பட்டு வந்தது. பொதுப்போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் தனிப்பட்ட வாகனங்கள் அனைத்தும் செயல்படாத காரணத்தால் சென்னை நகரின் அனைத்து சாலை போக்குவரத்து சிக்னல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், சில சுய தொழில் செய்வோர்களுக்கு பயணிக்க அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி உள்ளிட்ட பொருட்கள் பழுது பார்க்கும் நபர்கள், தச்சர், வாடகை கார் மற்றும் ஆட்டோ போன்ற வாகனங்கள் இ – பதிவு பெற்று பயணிக்கலாம். இதனால் நாளை முதல் சென்னை மாநகரின் அனைத்து சாலை சிக்னல்களும் இயக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews