நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம் -
நாளை முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும்.
காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும். தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் நாளை முதல் மாலை 5 மணிவரை இயங்கும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் முழு ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ரேஷன் கடைகள் செயல்படும் நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் மே 10 முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்த தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கில் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், ரேஷன் கடைகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி பிற்பகல் 12 மணிவரை ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது ஜூன் 14 வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தினசரி காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் வருகிற ஜூன் 15ம் தேதி முதல் 2வது தவணை ரூ.2000 மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்டு உள்ள டோக்கன்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தமிழக அரசு தற்போது வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாளை முதல் ரேஷன் கடைகள் மாலை 5 மணிவரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.