பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 08, 2021

Comments:0

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

''ஆன்லைன் வகுப்புகளுக்கான, வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி விட்டன,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:பிளஸ் 2 மதிப்பெண் நிர்ணயம் செய்வதை, இறுதி செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, இரண்டு வாரங்களுக்குள் மதிப்பெண் வழிகாட்டு முறைகளை தயாரிக்கும். ஆன்லைன் வகுப்புகள் மற்றும் அதில் முறைகேடு ஏற்படாமல் தடுக்கும் வகையில், ஆன்லைன் வழிகாட்டு நெறிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் வெளியிடப்படும். 'நீட்' தேர்வு வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு; அதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர்கூறினார். பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ந டத்துவதற்கு ஏற்ற வழிகாட்டு நெறிமுறைகள் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில் தற்போது பிளஸ் 2 தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கின்ற வரையில் மாணவ- மாணவியருக்கு ஆன்லைன் மூலம் தான் வகுப்புகள் நடத்த வேண்டும். இருப்பினும் பல்வேறு தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் புகார்கள் வந்ததன் அடிப்படையில் தற்போது ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் தயார் செய்யும் நடக்கிறது. தற்போது அந்த பணி முடிந்துவிட்டதாகவும் ஆன்லைன் வழிகாட்டு நெறிமுறைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது தயார் நிலையில் உள்ளது. விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். பிளஸ் 2 தேர்வு ரத்துக்கு ஆதரவு இருப்பது போல சிலர் வேறு கருத்துகளை யும் தெரிவிக்கின்றனர். அதனால்,மதிப்பெண் போடுவதற்கு குழு அமைத்து செயல்பட வேண்டும் என்பது தான் நோக்கம். பள்ளிகளின் மீது வருகின்ற புகார்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சில பள்ளிகள் அதற்கான பதிலை தெரிவித்துள்ளனர். சில பள்ளிகளின் மீதான புகார்கள் உண்மையாக இருக்கும் போது அந்த புகார்கள் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் அ வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ் 2 தேர்ச்சி மதிப்பீட்டை பொறுத்தவரையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு(சிபிஎஸ்இ) உச்ச நீதி மன்றம் 2 வாரம் கால அவகாசம் அளித்துள்ளது. அதேபோல சர்வதேச இடைநிலைக் கல்விக் கழகத்துக்கும்( ஐசிஎஸ்இ) 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதி மன்றத்தில் கேட்டுள்ளனர். அதே வேகத்தில் தமிழக அரசும் மதிப்பெண் மதிப்பீடு செய்வதை அதற்கான குழு மேற்கொள்ளும். அதற்கான பணி இன்றே தொடங்கும். விரைவில் முதல்வர் அது குறித்து அறிவிப்பார். இவ்வாறு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். * நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி,‘கண்டிப்பாக தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க மாட்டோம். அதற்காகத் தான் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு பல்வேறு நடவடிக்கைகள் தமிழகத்தில் எடுக்கப்படும். கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தாலும் கூட தமிழகத்தில் நீட் தேர்வு நடக்காது. அதையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை திணித்தால் நீதிமன்றத்துக்கு செல்லவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதற்கேற்ற நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்க தயார் நிலையில் இருக்கிறார். நீட் தேர்வை பொறுத்தவரையில் யாருக்கும் பாதிப்பு வராத வகையில் அரசின் நடவடிக்கை இருக்கும் என்று அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். * மதிப்பெண்கள் மதிப்பீடு எப்படி? அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி மேலும் கூறியதாவது, ‘‘பிளஸ்2 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை விரைவில் அமைத்து உடனடியாக அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பேரில் கல்வி அதிகாரிகளை அழைத்து பேசினோம். அவர்கள் கொடுத்த கருத்துகளின் பேரில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் மாணவர்களின் முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் கண்டிப்பாக எடுக்கப்படும். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடக்காத நிலையில் அதற்கு முன்பு மாணவர்கள் பெற்றிருந்த மதிபெண்களை பார்க்க வேண்டியுள்ளது. அதாவது பத்தாம் வகுப்பில் இருந்து எடுக்கப்படுமா அல்லது ஒன்பதாம் வகுப்பில் இருந்து எடுக்கப்படுமா, என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். பலதரப்பட்டவர்களிடம் இருந்து கருத்துகள் வருகிறது. அவற்றை மேற்கண்ட குழுவில் வைத்து விவாதித்து, தேர்ச்சி மதிப்பீடுகள் செய்யப்படும். இது ஒரு புறம் இருக்க சிபிஎஸ்இயில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதையும் பார்த்து, எல்லாவற்றையும் ஒப்பிட்டு தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி மதிப்பீடு செய்யப்படும்’’ என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews