பள்ளிக் கல்வி தரவரிசை முன்னிலையில் தமிழகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 08, 2021

Comments:0

பள்ளிக் கல்வி தரவரிசை முன்னிலையில் தமிழகம்

பள்ளிக் கல்வியின் செயல்திறன் குறித்து, மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2019 - 20ம் ஆண்டுக்கான தர அட்டவணையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முன்னிலை வகிக்கின்றன.
பள்ளிக் கல்வியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகள் குறித்து, பி.ஜி.ஐ., எனப்படும் செயல்திறன் தர அட்டவணையை மத்திய கல்வி அமைச்சகம் 2019 முதல்வெளியிட்டு வருகிறது.இந்நிலையில் 2019 - 20ம் ஆண்டுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.அதன் விபரம்:பள்ளிக் கல்வி குறித்து வெளியிடப்படும் இந்த செயல்திறன் தர அட்டவணை 70க்கும் மேற்பட்ட அளவுகோல்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தரம் பிரிக்கப்படுகின்றன. இதில், அதிக தரம் உடைய மாநிலங்களுக்கு ஏ - பிளஸ் - பிளஸ் என்ற தரவரிசை வழங்கப்படுகின்றன.இதில், பஞ்சாப் மாநிலம் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. பீஹார் மற்றும் மேகாலயா குறைந்த புள்ளிகளை பெற்றுள்ளன.இதில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளில், கடந்த காலத்தைவிட 10 சதவீதகம் வளர்ச்சி காட்டியுள்ளன.மேலும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், நிர்வாக செயல்முறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளன.டில்லி, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், புதுச்சேரி, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகியவை பிளஸ் தர வரிசை பெற்றுள்ளன. தமிழகம், கேரளா, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் தீவுகள் ஆகியவை, ஏ - பிளஸ் - பிளஸ் தரவரிசை பெற்று முன்னிலை வகிக்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews