தடுப்பூசி எடுத்தவர்களும் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்படலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 22, 2021

Comments:0

தடுப்பூசி எடுத்தவர்களும் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்படலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை

தடுப்பூசி செலுத்துக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்றின் உருமாறிய புதிய டெல்டா ப்ளஸ் வைரஸ், பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புக்கு உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் தொற்று காரணமாக இருக்கிறது. இந்த உருமாறிய வைரஸ் முதன் முதலில் நேபாளத்தில்தான் கண்டறிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்டா வைரஸை மருத்துவர்கள் B.1.617.2 என்றும் அழைக்கிறார்கள். டெல்டா வைரஸில் இருந்து டெல்டா ப்ளஸ் வேரியண்ட் (B.1.617.2.1 அல்லது AY.1 ) என்ற புதுவகையான வைரஸ் தற்போது உருமாறி பரவ தொடங்கியிருக்கிறது. டெல்டா வைரஸின் முழுதன்மையும் கொண்டுள்ள இந்த டெல்டா ப்ளஸ், தென் ஆப்ரிக்காவில் கண்டுப்பிடிக்கப்பட்ட பீட்டா வைரஸ் (K417N) என்றதன்மையும் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் வகை இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரள மாநிலங்களில் சுமார் 20 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துக் கொண்டவர்களுக்கும் மேலும் தொற்றிலிருந்து குணமடைவானர்களுக்கும் இந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக இந்தியாவின் மூத்த தொற்றுநோயில் வல்லுநர்களில் ஒருவரான ஜமீல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews