பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தின் பொறுப்பு அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தால், லட்சக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகிஉள்ளனர். தினமும் நுாற்றுக்கணக்கானோர் மரணம் அடைகின்றனர். மேலும், சென்னையை விட பிற ஊர்களிலும், கிராமத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.மாற்றுப் பணிஎனவே, நிலைமையை சமாளிக்க, கல்லுாரி மற்றும் பள்ளி வளாகங்களில், கொரோனா கவனிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறையினருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அலுவலர் பற்றாக்குறை உள்ளதால், பிற துறைகளில் இருந்து மாற்றுப்பணிக்கு ஆட்களை நியமிக்க, சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டது. இந்நிலைமையை சமாளிக்க, பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை பயன்படுத்திக் கொள்ள, பள்ளி கல்வி செயலர் காகர்லா உஷா அனுமதி அளித்துள்ளார். அறிவுரைஇதையடுத்து, அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், பி.இ.ஓ., எனப்படும், வட்டார கல்வி அலுவலர்கள், டி.இ.ஓ., என்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு, கொரோனா பணிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டத்தில், 14 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தின் பொறுப்பு அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான, தேவைகளை ஏற்பாடு செய்வது, அவர்களின் வருகையை பதிவு செய்து, தினமும் நோயாளிகளை கண்காணித்து பெறப்படும் தகவல்களை அறிக்கையாக தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டு உள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.