சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வளாகத்தில் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது குறித்து தற்போது வழிகாட்டு நெறிமுறைகள் அரசு சார்பாக வெளியிடப்பட்டு உள்ளது.
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு முறைப்படி அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதே போன்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக டேப் வழங்குவது குறித்து முதற்கட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. கல்வி தொலைக்காட்சியை 4 சேனலாக துவங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது குறித்து இறுதி முடிவு அடுத்த வாரத்தில் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.