கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஜூலை 5 முதல் நடைபெற இருந்த பட்டய கணக்கியல் (CA) தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பான விசாரணையின் இறுதி முடிவு நாளை (ஜூலை 30) வரை ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
CA தேர்வுகள்
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக பொதுத்தேர்வுகள், நீட் தேர்வுகள் உட்பட அனைத்து வகையான நுழைவுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் 5 ஆம் தேதி முதல் இந்திய பட்டய கணக்காளர்கள் பணிக்கான CA தேர்வுகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் இத்தகைய தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பானது அல்ல என்பதால், தேர்வு முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கானது நீதிபதி ஏ.எம் கான்வில்கர் தலைமையில், மேலும் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வுகளை நடத்துவதற்கான முக்கிய காரணிகள் குறித்து ஒரு சுருக்கமான குறிப்பை வழங்க வேண்டும் என RTPCR யிடம் நீதிபதிகள் அமர்வு விளக்கம் கேட்டது. இது தவிர தேர்வுகளை ரத்து செய்வதற்கான சூழ்நிலைகளைக் குறிப்பிடுமாறும் நீதிபதிகள் அமர்வு வலியுறுத்தியது. முன்னதாக இன்று காலை 7 மணியளவில் துவங்கிய வழக்கு விசாரணையில், நாடு முழுவதும் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மாணவர்களின் நலனுக்காக பட்டய கணக்காளர் (CA) தேர்வுகள் நடத்தப்படலாம் என ICAI உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்தது. மேலும் தொற்றுநோய்களுக்கு மத்தியில் தேர்வுகளை நடத்துவதற்கான முடிவுக்காக 3,74,230 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்து கிடக்கின்றனர்.
மேலும் தேர்வுகளை நடத்துவது குறித்த அறிவிப்பின் பின்னாக ஜூன் 27 வரை 2,82,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கான தங்களது நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். இது தேர்வுகள் மீதான மாணவர்களின் ஆர்வத்தை விளக்குகிறது. சிலருக்கு தேர்வுகளை மேற்கொள்ள தடைகள் இருந்தாலும், இதனால் பெரும்பான்மையானவர்களின் ஆர்வம் பாதிக்கப்படாது என ICAI உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தவிர தேர்வுகள் நடத்தப்பட்டால், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களால் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாது எனவும் கூறப்பட்டது. இதற்கிடையில் தேர்வுகளை ரத்து செய்வது அல்லது ஒத்தி வைப்பது குறித்தும் நீதிபதிகள் அமர்வு ஆலோசனை செய்தது. இறுதியாக, CA தேர்வுகளை நடத்துவது அவசியம் என்பதை நீதிபதி அமர்வுக்கு தகுந்த விளக்கத்தை கொடுக்கவும், நாளை (ஜூலை 30) இது குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறி, வழக்கை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.