வீடு வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள சலுகை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 26, 2021

Comments:0

வீடு வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள சலுகை!

பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் பல தங்களது வாடிக்கையாளர்ளுக்கு வழங்கப்படும் கடன் சேவைகளில் சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்ற நிலையில், வீடு வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் சில கூடுதல் சலுகைகள் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்ட்டுள்ளது.

கூடுதல் சலுகை
கொரோனா 2 ஆம் அலைக்கு மத்தியிலும் பல நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக பல சேவைகளை அறிவித்து வருகிறது. அதிலும் கொரோனா பேரிடர் காலத்துக்கு என தனிநபர் கடன் வட்டியுடன் பல சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிட்டால் அவரது குடும்பங்களுக்கு உதவும் வகையில், நிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் ரிசர்வ் வங்கியும், கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது. அந்த வரிசையில் வீட்டு கடனுக்கான வட்டி விகிதமும் மிக குறைவாக உள்ள நிலையில், இந்த சமயத்தில் வீடுகளில் முதலீடு செய்பவருக்கு வரி விலக்கு கோரும் வகையிலான வருமான வரி சட்டம் 54, 54 ஜிபி சலுகைகள் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இந்த காலத்தில் வீடு வாங்குபவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
அதாவது நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு மத்தியில் வரி செலுத்துபவர்கள் சந்தித்து வரும் சிரமங்களை கருத்தில் கொண்டு வரி விலக்கு கோருவதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வீடு வாங்குபவர்களுக்கு 54, 54ஜிபி பிரிவின் கீழ் மூலதன ஆதாயங்களுக்காக ரோல் ஓவர் நன்மை கோருவதற்கான முதலீடு, கட்டுமானம், கொள்முதல் செய்வதற்கு செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஏப்ரல் 1 அல்லது அதற்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய முதலீட்டினை இப்போது செப்டம்பர் 30 வரை செய்து கொள்ள முடியும். அதே நேரத்தில் கொரோன தொற்றால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்படும் நிவாரணங்களில், 10 லட்சம் ரூபாய் வரையிலான இழப்பீட்டு தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews