பிளஸ்1 வகுப்புகள் அடுத்த வாரம் துவக்கம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 09, 2021

Comments:0

பிளஸ்1 வகுப்புகள் அடுத்த வாரம் துவக்கம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

11ம் வகுப்புகளுக்கான வகுப்புகள்.. ஜூன் 3வது வாரத்தில் இருந்து தொடங்கலாம்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
ஜூன் 3வது வாரத்தில் இருந்து 11ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில் 12ம் வகுப்பு ஆன்லைன் பாடங்களை தொடர வேண்டும் என்றும், 11ம் வகுப்பில் சில ஒவ்வொரு பிரிவிலும் 10-15% கூடுதல் மாணவர்களை சேர்க்கவும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள்:
1. தற்போது அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு, மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கேற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.

2. அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கோவிட்-19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம். 3. மிக அதிகப்படியன விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள் (கொள்குறிவகை) அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி, அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.

4. பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 3 வது வாரத்திலிருந்து அப்போது கோவிட் பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத் துவங்கலாம்.

5. 2021-2022 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி, உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம். 11ஆம் வகுப்புகள் ஜூன் 3வது வாரத்தில் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. +1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒவ்வொரு பிரிவிலும் 10-15% கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே பிரிவுக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால், 50 கொள்குறிவகை வினாக்கள் தயாரித்து தேர்வு வைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்-பாஸ் என்று ஏற்கனவே அறிவித்துள்ளனர். தற்போது 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்க குறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும். ஏதேனும் ஒரு பிரிவில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்தால் கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு 15 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதிகமான விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வுகள் வைத்து அனுமதிக்கலாம். ஜூன் 3வது வாரத்தில் வகுப்புகளை தொடங்க வேண்டும். +2 மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், தொலைத்தொடர்பு முறையிலும் பாடங்களை நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐஏஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews