தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வரும், 14ம் தேதி முதல் பணிக்கு வர, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா பெருந்தொற்றால், இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப் படாது என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், புதிய கல்வி ஆண்டுக்கான பணிகள் நடக்க உள்ளன.மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்கள் வழங்குவது, உயர்கல்விக்கான சான்றிதழ்கள் வழங்குவது, மாணவர் சேர்க்கையை துவங்குவது, பாட புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பணிகள் உள்ளன. மேலும் பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தம் செய்வது, மாணவர்களை கல்வி, 'டிவி' சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது போன்ற பணிகளும் உள்ளன.எனவே, தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி, வரும், 14ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.