திருமண சுப நிகழ்ச்சிகள் போன்ற விவரங்களைச் சென்னை மாநகராட்சியின் https://bit.ly/3iMkk7W என்ற இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கீழ்க்கண்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கீழ்க்கண்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
• திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை மாநகராட்சியின் இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும். 50 நபர்களுக்கு மிகாமல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். நுழைவு வாயிலில் கிருமி நாசினி திரவம் வைத்து அனைவரின் கைகளையும் சுத்தம் செய்து உள்ளே அனுமதிக்க வேண்டும். • நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் அமர வேண்டும்.
மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் விவரங்களைக் கொண்டு வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள். •கள ஆய்வின்போது நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திரு. ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப.,
முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.