12-ம் வகுப்பு மதிப்பெண் மதிப்பிடும் வழிமுறைகளை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 04, 2021

Comments:0

12-ம் வகுப்பு மதிப்பெண் மதிப்பிடும் வழிமுறைகளை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர் களுக்கு மதிப்பெண்களை மதிப் பிடுவதற்கான வழிமுறைகளை 2 வாரங்களில் நிர்ணயிக்க மத்திய கல்வி வாரியங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் நாட்டில் அசாதாரண சூழல் நிலவுகிறது.எனவே, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தேர்வு தொடர்பாக 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர்மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிபிஎஸ்சி மற்றும் சிஐஎஸ்சிஇ பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்குநீதிபதிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதையடுத்து 12-ம் வகுப்புமாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகளை நிர்ணயித்து, 2 வாரங்களில் தங்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என சிபிஎஸ்சி மற்றும் சிஐஎஸ்சிஇ-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“வழிமுறைகளில் யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தால் அதனை நாங்கள் ஆராய்வோம். பொதுத் தேர்வு ரத்து கோரிய மனுதாரர்களுக்கு இந்த வழிமுறைகளும் முக்கிய மானது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.-பிடிஐ

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews