NEET UG 2021 தேர்வுகள் ஒத்திவைப்பு? கொரோனா பரவல் எதிரொலி!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 03, 2021

Comments:0

NEET UG 2021 தேர்வுகள் ஒத்திவைப்பு? கொரோனா பரவல் எதிரொலி!!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவ நுழைவுத்தேர்வுகளை (NEET) ஒத்திவைக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியருக்கு மிரட்டல் - சிஇஓவிடம் புகார் NEET நுழைவுத்தேர்வு
மருத்துவப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்காக மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் NEET நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. முன்னதாக இந்த ஆண்டுக்கான NEET UG தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேசிய தேர்வு ஆணையம் நடத்தும் இந்த NEET நுழைவுத்தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் உட்பட ஏறத்தாழ 11 மொழிகளில் நடத்தப்படுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு சுமார் 3 மணி நேரம் நடத்தப்படும். அதனடிப்படையில் தேர்வு நடத்தும் அமைப்புகளின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி MBTS, BDS, BAMS, BSMS, BUMS, மற்றும் BHMS போன்ற மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு NEET நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதே போல NEET நுழைவுத்தேர்வு முடிவுகள் அந்தந்த மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்கும் என்று மார்ச் 12 ஆம் தேதி வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து PTI தகவலின்படி, NEET UG தேர்வு நடத்துவதற்கான இறுதி முடிவுகள் இன்று (மே 3) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர MBBS இறுதியாண்டு மாணவர்களை கொரோனா தொற்றுக்கு எதிராக, சேவையாற்றவும் பயன்படுத்தும் படி பிரதமர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் NEET நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வுகள் குறித்த அறிவிப்பை தெரிந்துகொள்ள ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் இணைந்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews