ஐ.சி.எப். ரெயில்வே பணி:
வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை - தமிழக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்ய முடிவு
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்க ளில் பணிபுரிய சமீபகாலமாக வடமாநிலத்தவரே அதிகமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல் வேறு அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்(ஐ.சி.எப்.)'அப் ரண்டிஸ்' பணிக்காக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு கடந்த 20-ந்தேதி வெளியானது. இந்த அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளில் 510 'அப்ரண்டிஸ்' பணிக்கான பணியிடங்கள் உள்ளதாகவும், அதில் தமிழகத்தில், அனைத்து மாவட்டங்க ளில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த வர்கள் மட்டுமே இந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அறிவிப் பின் மூலம் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முதல்படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.